நெல்லையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 12th February 2019 06:58 AM | Last Updated : 12th February 2019 06:58 AM | அ+அ அ- |

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவை அவதூறாகப் பேசியதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினரும், பிரியங்கா பேரவையினரும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொக்கிரகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வேணுகோபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது சுப்பிரமணியன் சுவாமியின் உருவப் பொம்மையை எரிக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக வந்த தகவலையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.