நெல்லையில் ஜனவரி 5 மின்தடை
By DIN | Published On : 04th January 2019 07:32 AM | Last Updated : 04th January 2019 07:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 5) நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ்வரம், உடையார்பட்டி, முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், மேலப்பாளையம் நேதாஜி சாலை, குறிச்சி, மேலநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகர்ப்புற மின்பகிர்மானச் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.