நெல்லையில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
By DIN | Published On : 04th January 2019 07:31 AM | Last Updated : 04th January 2019 07:31 AM | அ+அ அ- |

டாஸ்மாக் ஊழியர் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த ஆயுத்த மாநாடு வண்ணார்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தொமுச மாநில அமைப்பாளர் அ.தர்மன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலர் எல். சரவணபெருமாள், தொமுச டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க மாவட்ட செயலர் முப்பிடாதி, ஏ.ஐ.டி.யூ.சி. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலர் சாஸ்தா, அரசு பணியாளர் சங்க நிர்வாகி பெர்னாண்டோ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கூட்டத்தில், மோட்டார் தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் சாலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஆட்டோ தொழிலாளர் களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், ஜன. 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை திருநெல்வேலியில் வெற்றிகரமாக நடத்த வேண்டும், அன்றைய தினம் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் ராஜாராம், இளமுருகு, சிவன்ராஜ், ஆவுடையப்பன், மாரியப்பன், சி.எஸ்.பாண்டியன், முப்பிடாதி, தொமுச நிர்வாகி பிச்சை உள்பட பலர் கலந்துகொண்டனர்.