பாளை.யில் புத்தகக் கண்காட்சி நிறைவு
By DIN | Published On : 04th January 2019 07:34 AM | Last Updated : 04th January 2019 07:34 AM | அ+அ அ- |

புத்தாண்டையொட்டி பாளையங்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு புத்தக கண்காட்சி புதன்கிழமை நிறைவடைந்தது.
மாவட்ட மைய நூலகம், தேசிய வாசிப்பு இயக்கம், சாலிஸ் கூட்டமைப்பு சார்பில் கடந்த 29 ஆம் தேதி தொடங்கி புத்தக கண்காட்சி நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் அ. மரியசூசை தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் இரா. வயலட், வாசகர் வட்ட உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்ட துணைத் தலைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். புத்தனேரி கோ.செல்லப்பா பங்கேற்றுப் பேசினார். உதவி ஆட்சியர் (பயிற்சி) சுகபுத்ரா கலந்துகொண்டு நூல் திறனாய்வு செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
நூல் திறனாய்வில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர் விஷால் முதலிடமும், ஆறுமுகப் பெருமாள் 2
ஆவது இடமும், சாராஃபினா 3 ஆவது இடமும் பெற்றனர். புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற பாரதி புத்தகாலயம், தினத்தந்தி பதிப்பகம், ஜெயலெட்சுமி பதிப்பகம், தமிழ்ச்சுவடி பதிப்பகம், தி இந்து பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகத்தாருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் அ.பாலசுப்பிரமணியன், சு.முத்துசாமி, நூலகக் கண்காணிப்பாளர் சங்கரன், நூலகர்கள் சீனிவாசன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நல்நூலகர் அ. முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.