அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 07th January 2019 06:30 AM | Last Updated : 07th January 2019 06:30 AM | அ+அ அ- |

அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் கொடைவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மகாயாக சாலை பூஜையும், கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
10ஆம் நாள் திருவிழாவான ஜனவரி15 ஆம் தேதி இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.