நெல்லை சந்தைகளில் பச்சை மிளகாய் விலை உயர்வு

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் வரத்து குறைவு காரணமாக பச்சை மிளகாய் விலை உயர்ந்து கிலோ ரூ.45-க்கு விற்பனையானது.

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் வரத்து குறைவு காரணமாக பச்சை மிளகாய் விலை உயர்ந்து கிலோ ரூ.45-க்கு விற்பனையானது.
பனிப்பொழிவு காரணமாக பச்சைமிளகாய், முறுங்கைக்காய் வரத்து திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் குறைந்துள்ளது. அதேநேரத்தில் பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலைவிவரம் (கிலோவுக்கு): கத்தரிக்காய்-ரூ.26, வெண்டைக்காய்-ரூ.36, தக்காளி-ரூ.28, அவரை-ரூ.38, கொத்தவரை-ரூ.24, புடலங்காய்-ரூ.14, பீர்க்கங்காய்-ரூ.20, சுரைக்காய்-ரூ.10, பாகற்காய்-ரூ.40, மாங்காய்- ரூ.50, முருங்கைக்காய்- ரூ.85, பச்சைமிளகாய்- ரூ.45, வாழைக்காய்- ரூ.15, தடியங்காய்-ரூ.12, பூசணிக்காய்-ரூ.11, தேங்காய்-ரூ.40, வெள்ளரிக்காய்-ரூ.20, முள்ளங்கி-ரூ.12, காராமணி-ரூ.16, பல்லாரி- ரூ.19, சின்னவெங்காயம்-ரூ.26, சேனைக்கிழங்கு-ரூ.25, கருணைக்கிழங்கு-ரூ.32, சேம்புக்கிழங்கு-ரூ.30, எலுமிச்சை-ரூ.40, நார்த்தை-ரூ.25, தண்டுகீரை- ரூ.10, அரைக்கீரை-ரூ.10, குத்துப்பசலைகீரை-ரூ.10, மணத்தக்காளிகீரை- ரூ.20, கொத்தமல்லி கீரை-ரூ.37, உருளைக்கிழங்கு-ரூ.23, கேரட்-ரூ.38, பீட்ரூட்-ரூ.30,  செளசெள-ரூ.20, ரிங் பீன்ஸ்-ரூ.37, இஞ்சி-ரூ.70, நெல்லிக்காய்-ரூ.34, வாழைப்பழம்- ரூ.60, நூல்கோல்-ரூ.55.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com