நெல்லையப்பர் கோயிலில் மஹா ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வி
By DIN | Published On : 07th January 2019 08:24 AM | Last Updated : 07th January 2019 08:24 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழுவின் நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் திருக்கோயில் கிளை சார்பில் உலக நன்மைக்காவும், மழை வளம் பெருகவும் வேண்டி மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.30 மணிக்கு மேல் வேள்வி பூஜைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துறவிகள், பக்தர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கங்கை ஸ்நானம் செய்த காசி ருத்ராட்சம் பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழுவின் மாநகரத் தலைவர் ஐ.குணதுரை, துணைத் தலைவர் ஆர்.குணசீலன், அமைப்பாளர் ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.