மேலப்பாளையம் கல்லூரியில் வழிகாட்டுதல் முகாம்
By DIN | Published On : 07th January 2019 08:29 AM | Last Updated : 07th January 2019 08:29 AM | அ+அ அ- |

வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம், மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் னுச.மு.ரஜப் பாத்திமா வரவேற்றார். கல்லூரித் தலைவர் செய்யது அகமது தலைமை உரையாற்றினார். கல்லூரித் தாளாளர் குதா முகம்மது, கல்லூரிப் பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறைத் தலைவர் செ.ஷப்ரீன் முனீர் அறிமுக உரையாற்றினார். சிட்டி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் நயினா முகமது, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அவசியம் குறித்துப் பேசினார். ரோட்டரி சங்கத் தலைவர் வடிவேலு சிறப்புரையாற்றினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அலுவலரும், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியருமான ஜோ.சோபியா மேரி நன்றி கூறினார்.