திருநெல்வேலி அருகேயுள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், மகா பூர்ணாஹுதி, அபிஷேகம், காலை 10.30 மணிக்கு மேல் விமான கோபுரங்களுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. நண்பகலில் மூலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் பிரகாரத்தில் உள்ள 16 விநாயகருக்கும் பக்தர்கள் தங்களது கைகளால் புஷ்பாபிஷேகம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 6.30 மணிக்கு மேல் சுவாமி கோயிலில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
தியாகராஜநகர் கோயிலில்...
பாளையங்கோட்டை தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் 30ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு கும்பபூஜை, ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் 27ஆவது முறையாக சிறப்பு அலங்காரத்தில் உற்சவ விநாயகர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் அர்ச்சகர் வெங்கடசுப்பிரமணிய பட்டர் குழுவினரின் வேதபாராயணம், சுப்பிரமணியபிள்ளை குழுவினரின் திருமுறை விண்ணப்பம், பாலசுப்பிரமணியன் குழுவினரின் நாகசுர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.