நெல்லையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd July 2019 10:18 AM | Last Updated : 03rd July 2019 10:18 AM | அ+அ அ- |

தர்ம பிரபு திரைப்படத்தை தடைசெய்யக் கோரி இந்து முன்னணியினர் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள திரையரங்கு முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன், திருநெல்வேலி கோட்டத் தலைவர் தங்க மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்மபிரபு என்ற திரைப்படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் நோக்கிலும், இந்து மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராகவும் காட்சிகள் உள்ளதால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஆட்டோ முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கே.சங்கர், மாவட்டச் செயலர் எம்.சுடலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இசக்கிமுத்து, ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.