ஐஐபிஇ லட்சுமிராமன் மெட்ரிக்.பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா
By DIN | Published On : 09th June 2019 03:38 AM | Last Updated : 09th June 2019 03:38 AM | அ+அ அ- |

ஐஐபிஇ லட்சுமிராமன் மெட்ரிக். பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், திருநெல்வேலி பெட்காட், ஐஐபிஇ லட்சுமிராமன் மெட்ரிக். பள்ளி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலரும், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவருமான எஸ்.ஆர்.அனந்தராமன் தலைமை வகித்தார்.
பெட்காட் மாவட்டச் செயலர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் வனச்சரகர் கேசவன், தேசிய பசுமைப் படை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வின் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து சங்கர் மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை திட்ட அலுவலர் , திருநெல்வேலி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொருளாளர் அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில், இயக்க துணைத் தலைவர் வானுவாமலை, செளராஷ்டிர மகாஜன சபை தலைவர் என்.எஸ்.மணிலால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி முதல்வர் இந்துமதி நன்றி கூறினார்.