கோயில் கொடை விழா பேட்டை நரிக்குறவர் காலனி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
By DIN | Published On : 09th June 2019 03:37 AM | Last Updated : 09th June 2019 03:37 AM | அ+அ அ- |

கோயில் கொடை விழா நடத்த இடவசதி கேட்டு பேட்டை நரிக்குறவர் காலனி மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில்,
பேட்டை நரசிங்கநல்லூரில் நரிக்குறவர் காளியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் ஆகிய இரண்டு கோயில் கொடை விழா வரும் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடத்த உள்ளோம். அங்குள்ள கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அந்த காலி இடத்தில் எங்களது கோயில் கொடை விழா நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.