தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
By DIN | Published On : 09th June 2019 03:37 AM | Last Updated : 09th June 2019 03:37 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை அருகில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் தாமிரவருணி ஆற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை அருகில் உள்ள தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக தச்சநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்தச் சடலத்தை மீட்டனர்.
இறந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆணின் சடலத்தில் 6 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தச் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.