பாளை. சுற்று வட்டாரங்களில் 11இல் மின்தடை
By DIN | Published On : 09th June 2019 03:38 AM | Last Updated : 09th June 2019 03:38 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.