மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்: இருவர் கைது
By DIN | Published On : 09th June 2019 01:24 AM | Last Updated : 09th June 2019 01:24 AM | அ+அ அ- |

புளியங்குடி அருகே மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீஸார் சிங்கிலிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிங்கிலிபட்டி பிரதான சாலையில் வட மாவட்டத்திலிருந்து மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் முறையான ஆவணமின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம் துளுக்கம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பொன்னையா மகன் பிச்சை (49), திண்டுக்கல் மாவட்டம் புதூரைச் சேர்ந்த முத்துச்செட்டியார் மகன் கணபதி(48) ஆகிய இருவரைக் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.