வாசுதேவநல்லூரில் சட்ட அனுமதியின்றி மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டதாக, முன்னாள் ஊராட்சித் தலைவரைப் போலீஸார் கைது செய்தனர்.
வாசுதேவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரமூர்த்தி தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை ஆர்.சி. தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பாலம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர், திருமலாபுரம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் மாப்பிள்ளைத்துரை(57)என்பதும், மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. அதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 30 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். கைதான மாப்பிள்ளைத்துரை, திருமலாபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.