பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீஅலர்மேல்மங்கா பத்மாவதி ஸமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் ஸ்ரீநரசிம்ம பெருமாள் திருக்கோயில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை மூலமந்த்ர ஜெபம் மஹா பூர்ணாஹுதி, ஸ்ரீவேங்கடாசலபதி- ஸ்ரீநரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை பஞ்ச சூக்த ஹோமங்கள், விசேஷ அபிசேஷக ஆராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.