சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 07:05 AM | Last Updated : 14th June 2019 07:05 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில், தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதன்மை இயக்குநர் நிர்வாக பொறுப்பில் ஐ.ஏ.எஸ். அலுவலரை நியமிக்க வேண்டும், 13ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தென்காசி கோட்டத் தலைவர் முகம்மதுமுஸ்தபா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் கசங்காத்தான், ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் கோவிந்தன்,கோட்டச் செயலர் வேல்ராஜன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி மாரியப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் துரைசிங், அகஸ்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். சேகர் நன்றி கூறினார்.