தென்காசியில் திமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 14th June 2019 07:06 AM | Last Updated : 14th June 2019 07:06 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தினம் மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றிபெற்றதற்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், தென்காசி கொடிமரத் திடலில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நகர திமுக செயலர் ஆர்.சாதிர் தலைமை வகித்தார். சண்முகசுந்தரம், நாகூர்மீரான், நடராஜன், பால்ராஜ், கலைபால்துரை, சேக்பரீத், பீர்முகம்மது, பாலசுப்பிரமணியன், அப்துல்கனிஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, மாவட்டப் பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, ஒன்றியச் செயலர் செல்லத்துரை, நகரச் செயலர் ரஹீம், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர் திவான்ஒலி, சேக்முகம்மது, பரமசிவன், துணை அமைப்பாளர்கள் சீவநல்லூர் சாமித்துரை, எஸ்.கிட்டு, காதர்அண்ணாவி, நிர்வாகிகள் கஜேந்திரன், வடகரை ராமர், மோகன்ராஜ், கிட்டு, இசக்கி சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை, வழக்குரைஞர் ராஜா தொகுத்து வழங்கினார். வே.கோமதிநாயகம் வரவேற்றார்.ஜாகீர்உசேன் நன்றி கூறினார்.