நீதிபதிக்கு பிரிவு உபசார விழா
By DIN | Published On : 14th June 2019 07:06 AM | Last Updated : 14th June 2019 07:06 AM | அ+அ அ- |

செங்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, பணி மாறுதலாகும் நீதிபதி லிங்கம் ஏற்புரையாற்றினார். விழாவில் சங்கச் செயலர் த.அருண் வரவேற்றார். நீதிபதியாக தேர்வாகி இருக்கும் ஹரி ராமகிருஷ்ணன் பணி சிறக்கவும் வாழ்த்துரை வழங்கினர். வழக்குரைஞர்கள் முத்துக்குமாரசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியம், அருணாசலம், மாரியப்பன், சைலபதி சிவஞானம், ஆதி பாலசுப்பிரமணியன், அரசு வழக்குரைஞர் பரணீந்தர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில், வழக்குரைஞர்கள் மூர்த்தி, சங்கரலிங்கம், ஆசாத், பழனிக்குமார், மாரிமுத்து, முத்துராமகிருஷ்ணவேல், செல்வம், கரிசல் அருண், சிதம்பரம், திவாகரன், ராஜாராம், குமார், முத்து, பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர். இணைச் செயலர் கார்த்திகை ராஜன் நன்றி கூறினார்.