பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா
By DIN | Published On : 14th June 2019 07:08 AM | Last Updated : 14th June 2019 07:08 AM | அ+அ அ- |

பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த ஜூன் 1இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊத்துமலை ஆலய அருள்பணியாளர் வியான்னிராஜ் திருப்பலி நிறைவேற்றினார்.
தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் திருப்பலி, மறையுரை நடைபெற்றன. ஆயர்கள் திண்டுக்கல் லாரன்ஸ், பாம்பன்விளை சகாயராஜ், கோயம்புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம் பெர்னாட்ஷா, திருச்சி இருதயசாமி, ஸ்டேன் ஆகியோர் மறையுரை வழங்கினர்.
நிறைவு நாளான புதன்கிழமை இரவு புனித அந்தோணியார் திரு உருவ பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனியில் பங்குமக்கள் திரளாக கலந்துகொண்டனர். வியாழக்கிழமை காலை திருவிழா திருப்பலி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை அருள்பணி அமிர்த ராசா சுந்தர் மற்றும் அருள் சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனர்.