வாசுதேவநல்லூரில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 14th June 2019 07:04 AM | Last Updated : 14th June 2019 07:04 AM | அ+அ அ- |

வாசுதேவநல்லூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 9 பவுன் நகையைத் திருடிய மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் ராஜ்(45). இவர், தரணி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 11ஆம் தேதி உறவினர் இல்ல நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்க முடிவு செய்திருந்தாராம். அதையடுத்து, வீட்டின் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகையைக் காணவில்லையாம். இதுகுறித்து, ராஜ் அளித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூர் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.