புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் அவதி

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில்  புத்தகங்கள் வழங்கப்படாததால் படிக்க முடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர்.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில்  புத்தகங்கள் வழங்கப்படாததால் படிக்க முடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை நிகழ் கல்வியாண்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் 3, 4 மற்றும் 5 ஆம் ஆம் வகுப்பு பாடங்களில் மாற்றம் செய்து புதிய பாடத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய  பாடநூல்கள் தயாரிக்கும்பணி நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு புதிய பாடநூல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு  வருகிறது. 
இதனால், பாடங்களை படிப்பதில் மாணவர்களும்,  பாடங்கள் நடத்த முடியாமல் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இணையதளத்தில் பாடங்களை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்துகின்றனர். ஆகவே, இனியும் தாமதிக்காமல் ஆரம்பப் பிரிவு மற்றும் நடுநிலைப் பிரிவு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com