கடையநல்லூரில் திமுக கூட்டணி பொதுக்கூட்டம்
By DIN | Published On : 28th March 2019 06:35 AM | Last Updated : 28th March 2019 06:35 AM | அ+அ அ- |

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடையநல்லூரில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். பழனி நாடார் தலைமை வகித்தார். நகர திமுக செயலர் சேகனா வரவேற்றார் .
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியது: பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு வருகின்றன .துறைமுகங்கள், விமான நிலையங்கள் கூட தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் நடத்தாமலே இந்தியாவை வழி நடத்த பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் திட்டமிட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களும் பிரதமர் மோடி சொல்வதை கேட்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல்வர்கள் மிரட்டப்படுகின்றனர். பிரமதர் மோடி சொல்வதை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் செய்து வருகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமார், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்சிவ. பத்மநாதன், தொகுதி பொறுப்பாளர் வீ. கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, முன்னாள்
சட்டப்பேரவை உறுப்பினர் ரசாக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் டேனியல் அருள்சிங், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...