தாழையூத்து பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்துப் பகுதியில் அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரித்தார். 
Updated on
1 min read

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்துப் பகுதியில் அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரித்தார். 
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பால் மனோஜ் பாண்டியன் தாழையூத்து சங்கர் நகர், நாரணம்மாள்புரம், பாலாமடை, மேலபாலாமடை, குப்பக்குறிச்சி, ஆலடிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.  அப்போது வழிக நெடுகிலும் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பிரசாரத்தில், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் ந. கணேசராஜா, மாநில  அமைப்புச் செயலர் சுதா கே.பரமசிவம், மகளிர் அணிச்செயலர் விஜிலா சத்யானந்த்,  அவைத்தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியது:  தமிழக அரசு இப்பகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு  ரூ. 2,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.
இதில், பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம்,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட  கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com