நெல்லையில் நாளை கனிமொழி பிரசாரம்
By DIN | Published On : 28th March 2019 06:30 AM | Last Updated : 28th March 2019 06:30 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியத்தை ஆதரித்து திருநெல்வேலியில் திமுக மகளிர் அணி செயலர் கனிமொழி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) பிரசாரம் செய்கிறார்.
இதுதொடர்பாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் இரா. ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மக்களவைத்தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் சா.ஞானதிரவியம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திமுக மகளிர் அணி செயலர் கனிமொழி திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
மாலை 6 மணிக்கு ஆலங்குளத்தில் பிரசாரம் செய்யும் அவர், இரவு 8 மணிக்கு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகே நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...