மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
By DIN | Published On : 28th March 2019 06:34 AM | Last Updated : 28th March 2019 06:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையையொட்டி 5 முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 15 முதல் 26 ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி காலை 10.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை கலை மற்றும் கைவினை தயாரிப்பு பயிற்சி 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை மின்னனுவியல் பயிற்சி 8 முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்களுக்கும், மாலை 4 முதல் 6 மணி வரை 8 முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்களுக்கு வானியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு மாணவருக்கு ரூ.500 கட்டணமாகும்.
பயிற்சியில் சேர கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தை நேரில் அணுகலாம்.
0462-2500256 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...