போதிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் எம்.ஆர். குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வணிகர்கள் தங்களின் அன்றாட வாழ்வுக்காக காய்கனி, பழங்கள் போன்ற பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வராத வணிகர்களின் பணத்தையும் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையால் வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆகவே, இதனை தவிர்க்க வேண்டும். மேலும், வணிகர்கள் குறைந்த பட்சம் ரூ. 2 லட்சம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.