சுரண்டை அருகேயுள்ள மருக்கலான்குளம் பகுதியில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி வாக்கு சேகரித்தார்.
மருக்கலான்குளம், சீவலசமுத்திரம், தங்கம்மாள்புரம், மருதாத்தாள்புரம், பலபத்திரராமபுரம், அமுதாபுரம், சண்முகாபுரம், கீழக்கலங்கல், கங்கணாங்கிணறு, அண்ணாமலைப்புதூர், நொச்சிகுளம், உச்சிபொத்தை, குறிச்சான்பட்டி, கரையாளனூர் ஆகிய கிராமங்களில் திறந்த காரில் நின்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தென்காசி எம்.எல்.ஏ. சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.