நெல்லையில் 103 டிகிரி வெயில்
By DIN | Published On : 05th May 2019 03:11 AM | Last Updated : 05th May 2019 03:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், சனிக்கிழமையும் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
கடும் வெப்பம், அனல் காற்று காரணமாக நண்பகலில் மாநகரின் பிரதானச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெப்பம் காரணமாக மாநகரப் பகுதியில் இளநீர், பதநீர், நுங்கு, குளிர்பானங்கள், பழச்சாறு, தர்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.