பெண்களிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 05th May 2019 03:09 AM | Last Updated : 05th May 2019 03:09 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே இரு கிராமங்களில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முருகையா. இவர் வெள்ளிக்கிழமை வெளியூர் சென்றுவிட்டாராம். அவரது மனைவி ராமலட்சுமி (58) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவில் வீட்டுக்கு புகுந்த மர்ம நபர்கள் ராமலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
மற்றொரு சம்பவம்: சின்னக்கோவிலான்குளம் அருகே தர்மத்தூரணியைச் சேர்ந்த முருகையா மனைவி ஆனந்தி (40). இவர் வெள்ளிக்கிழமை இரவு காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்தாராம். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ஆனந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சின்னக்கோவிலான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.