வாசுதேவநல்லூரில் மணல் கடத்தல்: டிராக்டர், ஜீப் பறிமுதல்
By DIN | Published On : 05th May 2019 03:10 AM | Last Updated : 05th May 2019 03:10 AM | அ+அ அ- |

வாசுதேவநல்லூரில் மணல் கடத்தியதாக டிராக்டர், ஜீப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அதிகாலை ஊருக்கு மேல்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.டி. நகர் மற்றும் இருளப்பசாமி கோயில் தெரு ஆகிய 2 இடங்களில் மணல் ஏற்றிவந்த ஜீப், டிராக்டர் ஆகியவற்றை போலீஸார் மறித்தபோது, அதன் ஓட்டுநர்கள் அந்த வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டுத் தப்பியோடிவிட்டனராம்.
அதையடுத்து, ஜீப் மற்றும் டிராக்டரைப் பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிந்து, அதன் ஓட்டுநர்கள், உரிமையாளர்களைத் தேடி வருகின்றனர்.