இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட தலைவர் செய்யதுசுலைமான் தலைமை வகித்தார். தென்காசி நகரத் தலைவர் அபுபக்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முகம்மதுகாசிம் பிரார்த்தனை செய்தார். மாவட்ட துணைச் செயலர்கள் முகம்மதுஅலி, அப்துல்வகாப், நவாஸ்கான், தலைமை நிலைய பேச்சாளர் முகம்மதுஅலி ஆகியோர் பேசினர்.
முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில், குற்றாலத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள தேசிய கருத்தரங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், நிர்வாகிகள் கலீல்ரஹ்மான், காஜாமுகைதீன், ரஹ்மத்துல்லா, முகம்மதுஇஸ்மாயில், ரசூல், சாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டச் செயலர் இக்பால் வரவேற்றார். செய்யதுமுகம்மது நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.