குற்றாலம் மலைப் பகுதியில் தீ
By DIN | Published On : 05th May 2019 03:10 AM | Last Updated : 05th May 2019 03:10 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முதல் தீப்பற்றி எரிந்து வருகிறது.
குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் தரையிலிருந்து 800 மீட்டர் உயரத்தில் காட்டாற்று அருவி பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மூங்கில், அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன. சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக ஒன்றரை ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்து வருகிறது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கடுமையான காற்று வீசுவதால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் வனவர் பாண்டியராஜ் தலைமையில் குற்றாலம் மற்றும் புளியரை வனப் பணியாளர்கள் 30 பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தின் காரணமாக அரிய வகை மூலிகைகளும் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...