பாளை.யில் விவேகானந்தர் மன்றக் கூட்டம்
By DIN | Published On : 05th May 2019 03:11 AM | Last Updated : 05th May 2019 03:11 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மாநிலத் தமிழச் சங்கத்தில் விவேகானந்தர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மன்ற நிறுவனர்- தலைவர் வளன் அரசு தலைமை வகித்தார். பிரபா இறைவணக்கம் பாடினார். மன்றச் செயலர் சுந்தரம் வரவேற்றார். இருவேறு ஆன்மிகப் புரட்சியாளர்கள் என்ற தலைப்பில் விவேகானந்தர் மற்றும் ராமலிங்க வள்ளலார் இருவரும் செய்த சமய, சமுதாய, ஆன்மிக புரட்சிகள் குறித்து சொ. முத்துசாமி பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, மருத்துவர் மகாலிங்கம் ஐயப்பன், ராசகிளி, செ.திவான், பாஷ்யம், நெல்லையப்பன், கிருஷ்ணாபுரம் ராசு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ராசகோபால், கோதைமாறன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ரா.முருகன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...