சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
By DIN | Published On : 15th May 2019 09:15 AM | Last Updated : 15th May 2019 09:15 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
சேரன்மகாதேவி அருகே உள்ள மேலக் கூனியூரைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை மாலையில், குடும்பத்தினருடன் சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றாராம்.
குளித்து கொண்டிருக்கும்போது நவநீதகிருஷ்ணன் மகன் ஆகாஷ் (5), தவறி ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கி விட்டானாம். உடனடியாக சிறுவனை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.