சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி
By DIN | Published On : 15th May 2019 09:16 AM | Last Updated : 15th May 2019 09:16 AM | அ+அ அ- |

திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு பேராசிரியர் மீ. முருகலிங்கம், சிவப்பிரகாசம் என்ற நூலுக்கு விளக்கமளித்தார். மாணவர் சுப்ரமணியம், சிவகாமி தம்பதியினர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் முத்துக்குமாரசுவாமி, ராம்குமார், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். அடுத்த பயிற்சி வகுப்பு வரும் ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.