அரசு அருங்காட்சியகத்தில் காந்தி புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 19th May 2019 08:03 AM | Last Updated : 19th May 2019 08:03 AM | அ+அ அ- |

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் "மகாத்மா காந்தி ஒரு சகாப்தம்' என்ற தலைப்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கிவைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் மகாத்மா காந்தியின் இளம் வயது முதல் அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களாக நடந்த நிகழ்வுகள் பற்றிய அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், மகாத்மா காந்தியின் புகைப்படத்தோடு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் மற்றும் நாணயங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இருபத்தைந்து வருடங்களுக்கு முற்பட்ட பழைய அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். கண்காட்சி ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி செய்திருந்தார்.