திருநெல்வேலி வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருநாள் சனிக்கிழமை நடைபெற்றது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இக்கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென் தமிழக மண்டலச் செயலர் சங்கதாரி பிரபு தலைமை வகித்தார். மஹா அபிஷேகத்திற்காக ஒன்பது கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதுதவிர, பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெற்றது.
அபிஷேகத்தின்போது பகவான் புகழ்பாடும் வகையில் ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை பற்றிய சிறப்புரையும் நடைபெற்றன. ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.