பாளை. என்சிசி முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி
By DIN | Published On : 26th May 2019 05:36 AM | Last Updated : 26th May 2019 05:36 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் என்சிசி ஆண்டு பயிற்சி முகாமில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி ஆண்டுப் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம், கமான்டிங் அலுவலர் தினேஷ் நாயர், நிர்வாக அலுவலர் வெற்றி வேலு ஆகியோரின் மேற்பார்வையில் வரும் 29 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்சிசி மாணவர் - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
முகாமில், சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் மாணவர்- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து, தடை தாண்டும் பயிற்சி, ஆயுதங்களை கையாளும் திறன், நிலவியல் வரைபட பயிற்சி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஆகியவை இந்திய ராணுவ வீரர்கள், பள்ளி-கல்லூரி என்சிசி அதிகாரிகள் ஆகியோரால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபேதார் மேஜர் பி.வி. ராஜேஷ் செய்துள்ளார்.