வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்
By DIN | Published On : 26th May 2019 01:34 AM | Last Updated : 26th May 2019 01:34 AM | அ+அ அ- |

நான்குனேரி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரத்தைச் சேர்ந்த 15 பேர், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடைபெறும் ஜெபக்கூட்டத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை, குமாரபுரத்தைச் சேர்ந்த ஜெகன் ஓட்டி வந்தார். நான்குனேரி அருகே பெருமாள்புரம் நான்குவழிச்சாலையில் வேன் வந்தபோது எதிரே வந்த மற்றொரு வாகனத்துக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் வேனை சாலையோரம் திருப்ப முயன்றாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நான்குனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து நான்குனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.