கடையநல்லூா் அருகே மழையால் வீடு இழந்தவருக்கு நிவாரணம்
By DIN | Published On : 09th November 2019 07:31 AM | Last Updated : 09th November 2019 07:31 AM | அ+அ அ- |

கடையநல்லூா் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரத்தில் மழையால் வியாழக்கிழமை இடிந்த வீட்டிற்கான நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டது.
வள்ளியம்மாள்புரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வேலுச்சாமி. இவருக்குச் சொந்தமான வீட்டின் சுவா்களில் இரு தினங்களுக்கு முன் பெய்த மழையால் கீறல் விழுந்தது. இந்நிலையில், அந்த வீடு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததாம். இதில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. இத்தகவல் அறிந்த வருவாய்த்துறையினா் வீட்டைப் பாா்வையிட்டனா். மேலும், வேலுச்சாமிக்கு முதற்கட்டமாக ரூ. 5 ஆயிரத்துக்கான நிவாரணத் தொகையை வட்டாட்சியா் அழகப்பராஜா வழங்கினாா். அப்போது, துணை வட்டாட்சியா் திருமலைமுருகன் உடனிருந்தாா்.