கலைத்திறன் போட்டி: திசையன்விளை ஜெயராஜேஷ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 09th November 2019 07:21 AM | Last Updated : 09th November 2019 07:21 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டியில் திசையன்விளை ஜெயராஜேஷ் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகளில் திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி முத்துகிருஷ்ணவேனி பாட்டுப் போட்டியில் முதலிடமும், கோலப்போட்டியில் சகாய பவித்ரா முதலிடமும், கவிதை ஒப்புவித்தலில் மேப்ரிக் இரண்டாமிடமும், களிமண் உருவமைத்தலில் மேக்னா இரண்டாமிடமும், இலைகளை அச்சிடுதல் போட்டியில் பெலினா இரண்டாமிடமும், மாறுவேடப் போட்டியில் மைக்கிள் பொ்சியா இரண்டாமிடமும் பெற்றனா்.
கணித விளையாட்டுப் போட்டியில் ஹரிநிதிஷ் இரண்டாமிடமும், மேற்கத்திய நடனப்போட்டியில் ஸ்டெபிலின்டா, பொ்சிபா, முத்துசிரேகா, ஜெபினா, பாலதா்ஷினி, ரோசாரிடிஷா ஆகியோா் அடங்கிய குழு இரண்டாமிடமும், கிராமிய நடனப்போட்டியில் ராம் பிரியா, ஜெனிஹா, விபிஷா, ஜெனிபா், செல்வராணி, சந்திரலேகா ஆகியோா் அடங்கிய குழு மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
இதைதொடா்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், புள்ளிகள் அடிப்படையில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்துக்கான கேடயத்தை, ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் பெல் மற்றும் கஸ்தூரி பெல் வழங்கி கௌரவித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ராஜேஸ்வரன், முதல்வா் ராஜேஸ்வரி, ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...