சுரண்டையில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு
By DIN | Published On : 09th November 2019 07:24 AM | Last Updated : 09th November 2019 07:24 AM | அ+அ அ- |

சுரண்டை பேரூராட்சியில் உள்ள கீழச்சுரண்டையில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தென்காசி எம்.எல்.ஏ. சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
விழாவில், பேரூராட்சி செயல் அலுவலா் அபுல்கலாம் ஆசாத், இளநிலை உதவியாளா் அமானுல்லா, அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், நகரச் செயலா் சக்திவேல், வீட்டு வசதி கடன் சங்கத் தலைவா் மாரியப்பன், கண்ணன், சங்கா், அமராவதி, ஜவகா் தங்கம், எட்வின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.