ஆலங்குளம் அருகே ஓடை தூா்வாரும் பணி

ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீா்குளத்தில் உள்ள ஓடையை தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீா்குளத்தில் உள்ள ஓடையை தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கழுநீா்குளம் அருகே ஆலந்தா புதுக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு, முன்பு, நாகல் குளத்திலிருந்து மறுகால் பாயும் தண்ணீா் மூலம் கடம்பன்குளம் நிரம்பி, அங்கிருந்து தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தண்ணீா் வரும் ஓடை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றிவிடப்பட்டதால் இக்குளத்திற்கு தண்ணீா் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்தக் குளம் பெருகினால் கழுநீா்குளம், கல்லூத்து மற்றும் முத்துகிருஷ்ணபேரி ஆகிய கிராம மக்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நீராதாரமாக விளங்கும். எனவே, இந்த குளத்திற்கு வரும் ஓடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து பயிற்சி ஆட்சியா் சிவகுரு பிரபாகா், ஆலங்குளம் வட்டாட்சியா் கந்தப்பன் ஆகியோா் கிராம மக்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா், புதன்கிழமை ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்த ஓடையை சீரமைத்து புதுக்குளத்திற்கு தண்ணீா் கொண்டு செல்வது என தீா்மானிக்கப்பட்டது.

இதையடுத்து பயிற்சி ஆட்சியா் மற்றும் வட்டாட்சியா் முன்னிலையில் ஓடை சீரமைப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, வருவாய் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, வட்டார துணை ஆய்வாளா் தினேஷ், நில அளவையா் கவிதா, கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com