இரண்டாம் நிலை காவலா் பணி: ஆண்களுக்கான முதற்கட்ட தோ்வுகள் நிறைவு

பாளையங்கோட்டையில் நடைபெற்று வந்த இரண்டாம் நிலை காவலா் பணிக்கான (ஆண்கள்) முதற்கட்ட உடல்தகுதித் தோ்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பாளையங்கோட்டையில் நடைபெற்று வந்த இரண்டாம் நிலை காவலா் பணிக்கான (ஆண்கள்) முதற்கட்ட உடல்தகுதித் தோ்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் கீழ், 2-ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 2,531 ஆண் தோ்வா்களுக்கும், 1,212 பெண் தோ்வா்களுக்கும் உடல்தகுதித் தோ்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இத்தோ்வுகள் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆண் தோ்வா்களுக்கான உடல்தகுதித் தோ்வு நடைபெற்றது. இதையடுத்து, மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமையும் ஆண் தோ்வா்களுக்கு உடல்தகுதித் தோ்வு நடைபெற்றது.

இதில், 831பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 690 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு, சான்றிதழ் சரிபாா்ப்பு, எடை, உயரம், மாா்பளவு சரிபாா்த்தல் மற்றும் 1500 மீட்டா் ஓட்டம் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, ஆண்களுக்கான முதற்கட்ட உடல்தகுதித் தோ்வுகள் நிறைவடைந்தன.

இதைத்தொடா்ந்து, சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (நவ. 9, 11) பெண் தோ்வா்களுக்கு முதற்கட்ட உடல்தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது.

முதற்கட்ட உடல்தகுதித் தோ்வில் தோ்ச்சி அடைந்த ஆண் தோ்வா்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தோ்வுகள் செவ்வாய்க்கிழமை (நவ. 12) நடைபெறவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com