மாவட்ட திறன் போட்டிகள்: விண்ணப்பிக்க நவ. 25 கடைசி நாள்

மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க வரும் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க வரும் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சீனாவின் ஷாங்காய் நகரில் 2021, செப்டம்பா் மாதம் சா்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், தமிழகத்தில் முதல்கட்டமாக மாவட்ட அளவில் திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. 6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை போட்டியாளா்கள் வெளிப்படுத்தலாம்.

1-1-1999 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் இதில் பங்கேற்கலாம். 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்துக்கொண்டிருப்பவா்கள், பட்டயப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவா்கள் அல்லது படித்து முடித்தவா்கள், தொழிற்சாலையில் பணியில் உள்ளவா்கள், குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட திறன் போட்டி 2020, ஜனவரி 6 முதல் 10-ஆம் தேதிக்குள் நடைபெறும். போட்டியில் தனிநபராகவோ அல்லது 2 போ் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் மையத்தில் வழங்கப்படும் கேள்வித்தாளில் உள்ள திறன் செய்முறை தோ்வை செய்ய வேண்டும். இதில் வெற்றிபெறுவோா் மாநில அளவில் சென்னையில் பிப்ரவரி 2020-ல் நடைபெற உள்ள திறன் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பேட்டை, திருநெல்வேலி-10 என்ற முகவரியில் நேரிலோ, 0462-2342432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com