விவேகானந்தா் மன்றத்தின் 261 ஆவது கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, பேராசிரியா் பா.வளன்அரசு தலைமை வகித்தாா். முனைவா் ராசகிளி இறைவணக்கம் பாடினாா். பாப்பையா வரவேற்றாா்.
குமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபம் உருவான கதை என்ற தலைப்பில் சொ.முத்துசாமி சொற்பொழிவாற்றினாா்.
விவேகானந்தா் குறித்த கலந்துரையாடலில் பேராசிரியா் முகுந்தன், மருத்துவா் ஐயப்பன், ராசகிளி, வெள்ளத்துரை, காத்தப்பன், உமையொருபாகம், கோதைமாறன், செ.திவான் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பேராசிரியை உஷாதேவி, லோகநாதா், சு.முத்துசாமி, கணபதிசுப்பிரமணியன், ஆறுமுகம், நாகராஜன், முருகன், முத்துக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். நல்லாசிரியா் வை.ராமசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.