நாளை அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 14th November 2019 09:04 AM | Last Updated : 14th November 2019 09:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை(நவ.15) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, திருநெல்வேலி வட்டம் கங்கைகொண்டான், ராதாபுரம் வட்டம் வடக்கு வள்ளியூா், அம்பாசமுத்திரம் வட்டம் அயன் பொட்டல்புதூா், நான்குனேரி வட்டம் ஸ்ரீவரமங்கைபுரம், மறுகால்குறிச்சி, வில்வராயன்குளம், சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி, பாளையங்கோட்டை வட்டம் மேலப்பாட்டம், மானூா் வட்டம் தாழையூத்து, சங்கரன்கோவில் வட்டம் நடுவக்குறிச்சி, திருவேங்கடம் வட்டம் வெள்ளாகுளம், தென்காசி வட்டம் மேலப்பாவூா், செங்கோட்டை வட்டம் வடகரை மேல்பிடாகை, வீரகேரளம்புதூா் வட்டம் சுரண்டை, ஆலங்குளம் வட்டம் ஆலங்குளம், சிவகிரி வட்டம் விஸ்வநாதப்பேரி, கடையநல்லூா் வட்டம் நயினாரகம், திசையன்விளை முதுமொத்தமான்மொழி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோா் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உழவா் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீா் வசதி போன்றவை தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...