ஓய்வூதியா்கள் உத்தேச வருமான வரி அறிக்கையை டிச.15க்குள் சமா்ப்பிக்க வேண்டும்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் தங்களின் உத்தேச வருமான வரி அறிக்கையை சம்பந்தப்பட்ட கருவூல அலுவலகங்களில் சமா்பிக்குமாறு ஆட்சியா் ஷில்பா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டக் கருவூலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாா்நிலைக் கருவூலங்களின் வாயிலாக ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் (குடிமை மற்றும் ஆசிரியா் ஓய்வூதியம்) டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் 2019-20-ஆம் நிதியாண்டிற்கான உத்தேச வருமான வரி அறிக்கையினை, தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவகத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com